சமூக நீதிக்கு பெரும் பிழை இழைத்துள்ள இந்த விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனங்கள் - எடப்பாடி பழனிசாமி

திங்கள், 31 ஜூலை 2023 (18:57 IST)
பட்டியல் இனத்தவர்களுக்கு வழங்கக்கூடிய SCSP நிதியில் இருந்து 1560 கோடியை பொது மகளிர் மாதாந்திர திட்டத்திற்காக மாற்றி சமூக நீதிக்கு பெரும் பிழை இழைத்துள்ள இந்த விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்  என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சமீபத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் அறிவிக்கப்பட்டு, இதற்கான தகுதிகள் அறிவிக்கப்பட்டு, கடந்த வாரம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தர்மபுரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விண்ணப்பங்களை மக்களிடம் அறிமுகம் செய்தார்.

 இந்த  நிலையில், பட்டியல் இனத்தவர்களுக்கு வழங்கக்கூடிய SCSP நிதியில் இருந்து 1560 கோடியை பொது மகளிர் மாதாந்திர திட்டத்திற்காக மாற்றி சமூக நீதிக்கு பெரும் பிழை இழைத்துள்ள இந்த விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள் என்று  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:.

‘’மேடைகளிலும் படங்களிலும் மட்டும் போலி சமூகநீதி பேசி வரும் இந்த அரசு உண்மையில் பட்டியல் இன மக்களுக்கு இத்தகைய துரோகம்‌ இழைத்திருப்பது, இவர்களின் உண்மை முகத்தை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது. பின்தங்கிய நிலையில் இருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும் நிதியை வேற்று பணிகளுக்கு மாற்றுவது பெரும் அநீதி,  இந்த அரசு உடனடியாக SCSP நிதியை உரிய துறையில் ஒப்படைக்க வேண்டும் என கண்டிப்புடன் வலியுறுத்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்