கோயம்புத்தூர்க்காரங்கள பாத்து கத்துக்கணும்! – எடப்பாடியார் ட்வீட்

Webdunia
சனி, 28 மார்ச் 2020 (10:49 IST)
கோயம்புத்தூர் காய்கறி மார்க்கெட்டில் மக்கள் சமூக இடைவெளி கடைபிடித்ததை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டியுள்ளார்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் அன்றாடம் காய்கறி சந்தைகள் வழக்கம்போல செயல்படும் என கூறப்பட்டுள்ளதால் மக்கள் கூட்டம் காய்கறி மார்க்கெட்டுகளில் அதிகம் உள்ளது.

இதை கட்டுப்படுத்தவும், சமூக இடைவெளி காக்கவும் போலீஸார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கோயம்புத்தூர் காய்கறி சந்தையில் சமூக இடைவெளிக்கான கட்டங்கள் வரையப்பட்டுள்ளது. மக்கள் மாஸ்க் அணிந்தபடியே காய்கறி சந்தைக்கு வருகை புரிந்துள்ளனர். உள்ளே செல்லும்போதும், வெளியே வரும்போதும் சானிட்டைசர்கள் கொண்டு கைகளை சுத்தம் செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி ” கோயம்புத்தூர் காய்கறி சந்தையில் பொறுமையுடனும், பொறுப்புடனும் சமூக இடைவெளியை பின்பற்றி மக்கள் நடந்து கொண்டது பாராட்டிற்குரியது. இதற்கான பணிகளை மேற்கொண்ட காவல் துறையினருக்கு எனது பாராட்டுதல்கள்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்