அமெரிக்காவுக்கே இந்த நிலைனா, நாம எம்மாத்திரம்.. கிலியில் ராமதாஸ்?

சனி, 28 மார்ச் 2020 (09:09 IST)
டாக்டர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், கொரோனாசால் அமெரிக்காவுக்கே இந்த நிலை எனும் போது நமது நிலை? என கேள்வி எழுப்பியுள்ளார். 
 
உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான உயிர் பலிகளை ஏற்படுத்திய கொரோனா தற்போது இந்தியாவிலும் தீவிரமாக பரவ துவங்கியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 
 
நேற்று வரை இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக இருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 834 ஆக உயர்ந்துள்ளது. இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
இந்நிலையில் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பின்வருமாரு பதிவிட்டுள்ளார். உலகின் ஈடு இணையற்ற வல்லரசான அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் அச்சத்தை ஏற்படுத்துகிறது. நேற்று ஒரே நாளில் 17,507 பேரை கொரோனா வைரஸ் நோய் தாக்கியிருக்கிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 256 பேர் கொரோனா வைரஸ் நோய்க்கு பலியாகியுள்ளனர். 
 
கொரோனா வைரஸ் பாதிப்பில் சீனாவை அமெரிக்கா மிஞ்சியிருக்கிறது. சீனாவில் இதுவரை 81,285 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவில் இந்த எண்ணிக்கை 85,268 ஆக அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவுக்கே  இந்த நிலை எனும் போது நமது நிலை? எனவே விழிப்புடன் இருப்போம், விலகி இருப்போம்! என பயம் கலந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ட்விட் போட்டுள்ளார். 
 
உண்மையில் மக்களும் கொரோனா பரவுதலின் பாதிப்பை உணர்ந்து தமிழக அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்