நிதி அமைச்சர் மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (13:23 IST)
சட்டப் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, செய்தியாளர்களிடம் பேசினார். 
 
அப்போது அவர் கூறுகையில், ஓபிஎஸ் நிதி அமைச்சராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும், துணை முதல்வராகவும் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். 
 
அவர், நிதித் துறை சார்ந்து கேள்விகள் எழுப்பிக் கொண்டிருந்தபோது, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முறையாக பதிலளிக்க முடியாமல் கையில் இருந்த பேப்பரை தூக்கி எறிந்துவிட்டு வெளியேறினார். 
 
இந்த செயலைக் கண்டித்து தற்போது நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்