தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2025-ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாத காலத்தில் 7,557 தேர்வர்கள் பல்வேறு பணிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.மேலும், நேரடி நியமனங்களில் சமூக நீதியை வலுப்படுத்த 441 பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான குறைவு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளனர்.
ஒருமுறை பதிவிற்கானக் கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணங்களை தேர்வாணைய இணையதளத்தில் தேர்வர்கள் செலுத்துவதை எளிமைப்படுத்தும் விதமாக, யுபிஐ மூலம் செலுத்தும் வசதியை தேர்வாணையம் அறிமுகப்படுத்தி உள்ளது. .தேர்வர்களுக்கு தகவல்களை வழங்குதல்தேர்வர்கள் தேர்வு தொடர்பான செய்திகள் மற்றும் தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் சேனல் தொடங்கப்பட்டு, தகவல்கள் கடந்த பிப். 14 முதல் தேர்வர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தெரிவுப்பணிகள் நிறைவு பெற்றபின் எந்தெந்த பதவிகளுக்கு தெரிவுப்பட்டியல் நியமன அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்ற தகவல் தேர்வாணையத்தின் 'X' தளம், டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் சேனல்கள் மூலமாக தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் தெரிவித்துள்ளது.