தாலிக்கு தங்கம் திட்டத்தைதான் இப்படி மாற்றியுள்ளோம்! – நிதியமைச்சர் அளித்த விளக்கம்!

ஞாயிறு, 20 மார்ச் 2022 (12:47 IST)
தமிழ்நாடு ஆண்டு பட்ஜெட்டில் தாலிக்கு தங்கம் திட்டம் இடம்பெறாதது குறித்த கேள்விக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள ஏழை எளிய பெண்களின் திருமணத்திற்கு உதவும் வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் இந்த திட்டம் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது ஆட்சியமைத்துள்ள திமுக அரசின் ஆண்டு பட்ஜெட்டில் இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை.

இதுகுறித்து எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இந்த திட்டத்தை நிறுத்தியது குறித்து பேசிய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் “பெண்களின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் தாலிக்கு தங்கம் திட்டத்தை பெண்களின் கல்வி முன்னேற்றத்திற்கான திட்டமாக மாற்றியுள்ளோம். உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்குவதால் அவர்களே சுயமாக உயர்கல்வி பெற்று வாழ்வில் முன்னேற்றம் அடைய வாய்ப்பாக அமையும்” என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்