பாலிடெக்னிக் மாணவிகளுக்கும் உதவித்தொகை! – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு!

வியாழன், 24 மார்ச் 2022 (12:47 IST)
கல்லூரி மாணவிகளுக்கு அறிவிக்கப்பட்ட அரசு உதவித்தொகை பாலிடெக்னிக் மாணவிகளுக்கும் வழங்கப்படும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு ஆண்டு பட்ஜெட் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து, பின்னர் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மாணவிகளுக்கான அரசு உதவித்தொகை 6 முதல் 10ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்துவிட்டு பாலிடெக்னிக், ஐடிஐ போன்றவற்றில் சேர்ந்த மாணவிகளுக்கும் மாதம்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்