விடுதி மாணவர்களுக்கு நலதிட்டங்களை வழங்கி மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்

Webdunia
புதன், 18 மே 2022 (22:57 IST)
சோளிங்கர் அருகே ஆதிதிராவிடர் நல விடுதி மாணவர்களுக்கு நலதிட்டங்களை வழங்கி மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மாணவர்களுடன் வாலிபால் விளையாடினார் .
 
ராணிப்பேட்டை மாவட்டம் ,சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட கொண்டபாளையம் ஸ்ரீராம் நகரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளி மாணவி விடுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் மாணவர்களுக்கு அடிப்படை தேவையான பொருட்களை வழங்கினார்.

அப்போது அருகில் இருந்த மைதானம் முட்புதர்களும் குப்பைகளும் இருந்ததைப் பார்த்து அப்பகுதி  பொதுமக்களிடம் இனிவரும் காலங்கள் குப்பைகளை கொட்ட கூடாது .மீறி குப்பைகளை கொட்டினால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.  அதனைத் தொடர்ந்து பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள் கொண்டு அப்பகுதியில் இருந்த குப்பைகளை அகற்றினார்கள் . மேலும் விடுதி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் முட்புதர்களை அகற்றி மைதானத்தை சீரமைக்க வேண்டும் என வருவாய்த் துறைக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் சோளிங்கர் வட்டாட்சியர் வெற்றி குமார் தலைமையில் வருவாய்த்துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் முட்புதர்களை அகற்றி மைதானமாக மாற்றினார்கள். நகராட்சி பணியாளர்கள் செய்தனர். தொடர்ந்து விடுதி மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக விடுதி மாணவர்களோடு மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் வாலிபால் விளையாடினார். மேலும் உடனடியாக மைதானத்தை சீரமைத்து கொடுமைப்படுத்தி பணியில் ஈடுபட்ட வருவாய்த் துறையினர் மற்றும் நகராட்சி  பணியாளர்களை பாராட்டினார். மாணவர்களுக்கு வாலிபால் பரிசாகத் தந்தார். விடுதி மாணவர்களுக்காக மைதானத்தை உடனடியாக சீரமைத்து தந்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு விடுதி மாணவர்கள் விடுதி காப்பாளர் நன்றியை தெரிவித்தனர்.   முன்னதாக விடுதி மாணவர்களுக்கு அடிப்படை தேவையான  பொருட்களை வழங்கினார்..

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்