பழமையான அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோவிலில் வைகாசி மாத பெருந்திருவிழாவை முன்னிட்டு இரவு கம்பம் நடுவிழா!

J.Durai
புதன், 1 மே 2024 (15:18 IST)
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் இந்து சமய அறநிலைத்துறைக்கு உட்பட்டுள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன்  பழமையான திருக்கோவிலில் வருடாவருடம்  வைகாசி மாத பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். 
 
அதேபோல் இந்த வருடம் திருவிழாவின் முதல் நிகழ்வாக அரசமரத்தினால் செதுக்கப்பட்ட கம்பம் மஞ்சளாற்றில் இருந்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக மேளதாள வான வேடிக்கையுடன் எடுத்து வந்து முத்து மாரியம்மன் திருக்கோவில் முன்பாக கம்பம் நடும்விழா வெகு  விமர்சையாக நடைபெற்றது.
 
அதனைத் தொடர்ந்து இன்று காலை கொடியேற்றத்துடன் வைகாசி மாத திருவிழா தொடங்கி 07.05.2024 அன்று அருள்மிகு செல்லாயி அம்மன் திருக்கோயில் பொங்கல் வைத்தலும். 08.05.2024 அன்று புண்ணியாதானமும் அதனைத் தொடர்ந்து 28.05.2024 அன்று வரை உற்சவ திருவிழா அதிவிமர்சையாக நடைபெறும். 
 
கம்பம் நடுவிழாவில் இந்து சமய அறநிலை துறை மாவட்ட அலுவலர் குழு தலைவர், அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்