தமிழகத்தில் அமைந்துள்ள ஒரு கட்சியின் அரசு அல்ல, இனத்தின் அரசு. சிந்துவெளி பண்பாடு தொடர்பான கருத்தரங்கு இந்தியாவில் வேறு எங்கும் நடைபெறவில்லை. சிந்துவெளி நாகரிகத்தில் திராவிட மொழி பேசப்பட்டிருக்காலம் என கூறப்பட்டது. சிந்துவெளி நாகரிகம் முதன் முதலில் 1924-ம் ஆண்டு உலகுக்கு அறிவிக்கப்பட்டது. சிந்து சமவெளி நாகரிகத்தை உலகிற்கு எடுத்துக் காட்டியவர் சர் ஜான் மார்ஷல்.
சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வு உலகை ஈர்த்துள்ளது. கீழடியைப் போலவே பொருணையிலும் அருங்காட்சியக பணிகள் நடைபெற்று வருகின்றன. சிந்துவெளி அகழ்வாராய்ச்சி பணிகள் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. சிந்துவெளி குறியீடுகளும், கீழடி குறியீடுகளும் 60 சதவீதம் ஒத்துப்போகின்றன.
சிந்துவெளிப் பண்பாட்டின் எழுத்து முறையை தெளிவாக புரிந்து கொள்ள உதவும் வழி வகையை கண்டறியும் அமைப்பு அல்லது நபருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்படும். கல்வெட்டு ஆய்வாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் 2 அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் பெயரில் ஆய்வு இருக்கை அமைக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.