சாலை வசதி கேட்டு மாணவர்கள் சாலை மறியல்! – திண்டுக்கலில் போக்குவரத்து பாதிப்பு!

புதன், 6 டிசம்பர் 2023 (11:18 IST)
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே கணவாய்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டு கொம்புகாரன் பள்ளம் உள்ளது.


 
இங்கு சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்த பகுதியில் இருந்து ஆரம்ப பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிக்கு சக்கிலியன் கொடைக்கு செல்ல வேண்டும்.இதற்கு மாணவர்கள் தனியாருக்கு சொந்தமான பாதையை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் திடீரென நிலத்தின் உரிமையாளர் பாதையை அடைத்தார்.இதனால் பள்ளி மாணவர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் செவ்வாய்க்கிழமை  திண்டுக்கல்-நத்தம் சாலை ஒத்தக்கடை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த சாணார்பட்டி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.பின்னர் இது சம்பந்தமாக உயர் அதிகாரியிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் பேரில் மாணவர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் அங்கிருந்து சாணார்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் இளையராஜாவிடம் சாலை வசதி கேட்டு புகார் மனு அளித்தனர்.மாணவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்