திமுக எம்எல்ஏ மகன் மற்றும் மருமகள் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் இருவருக்கும் பிப்ரவரி ஒன்பதாம் தேதி வரை நீதிமன்ற காவல் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்லாவரம் தொகுதியின் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் தங்கள் வீட்டில் வேலை செய்த சிறுமி ஒருவரை கொடுமைப்படுத்தியதாக புகார் எழுந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த நிலையில் திடீரென இருவரும் தலைமறைவானதாக தகவல் வெளியானது
இந்த நிலையில் போலீசார் தனிப்படை அமைத்து இருவரையும் தேடி வந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டனர். இதனை அடுத்து நீதிமன்றத்தில் இருவரையும் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பிப்ரவரி 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நான் நீதிபதி உத்தரவிட்டார்.
இதனை அடுத்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது