விநாயகர் சிலைகளை கரைக்க இனி கட்டணம்!

Sinoj

வியாழன், 25 ஜனவரி 2024 (16:37 IST)
விநாயகர் சதுர்த்தி பண்டிகை ஒவ்வொரு ஆண்டுகள் இந்தியாவில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் இந்துப் பண்டிகையாகும்.

விநாயகர் சதுர்த்தியின்போது சிலைகளை ஆறு, கடல் உள்ளிட்ட  நீர்ப்பகுதியில் மக்கள் கரைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியின் போது சிலைகள் கரைப்பதற்கு அனுமதி வழங்க கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என தமிழக சுற்றுச்சூழல் துறை  செயலாளர் தலைமையிலான குழுக்கு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

அனுபமதி வழங்க வசூலிக்கப்படும் கட்டணத்தை அறிவிக்கப்பட்ட நீர் நிலைகள் பராமரிப்புக்கு செலவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அறிவிக்கப்படாத நீர் நிலைகளில் கரைத்தால் விதிக்கப்படும் அபராதம் பற்றி விளம்பரப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்