இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், செய்தியாளரை தாக்கியவர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தாக்கப்பட்ட செய்தியாளர் காவல்துறையிடம் உதவி கேட்டும், உதவி மறுக்கப்பட்டு இருக்கிறது என்றும் உரிய நேரத்தில் காவல்துறை உதவி செய்திருந்தால் செய்தியாளர் மீதான தாக்குதலை தடுத்திருக்கலாம் என்றும் எல்.முருகன் தெரிவித்தார்