இந்த ஆண்டு பொங்கல் பரிசு பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுமா? நீதிமன்றம் கேள்வி..!

Mahendran
செவ்வாய், 3 டிசம்பர் 2024 (17:33 IST)
இந்த ஆண்டு பொங்கல் பரிசு பணம் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுமா என்ற கேள்வியை நீதிமன்றம் தமிழக அரசுக்கு எழுப்பி உள்ளது. இதற்குறித்து பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலை என்ற பகுதியைச் சேர்ந்த சுந்தர விமலநாதன் என்பவர் பொங்கல் பரிசு தொகையில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் வழங்குவது குறித்து அரசு முடிவு எடுக்க வேண்டும் என்றும், அதேபோல் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் ஆயிரம் ரூபாயை வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, கடந்த ஆண்டு இதே மனுதாரர் இந்த கோரிக்கையுடன் மனு தாக்கல் செய்த நிலையில், இது குறித்து உரிய அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்து உள்ளீர்கள் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும், இந்த உத்தரவை ஏன் நிறைவேற்றவில்லை? அதற்கு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஏன் எடுக்க கூடாது என்றும் நீதிபதிகள் காட்டமாக கேள்வி எழுப்பினார்.

மேலும் இது குறித்து உடனடியாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசின் கூட்டுறவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, டிசம்பர் 19ஆம் தேதிக்கு இந்த வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.



Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்