ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்.. ரெய்டு சென்ற போலீஸ் அதிகாரி படுகாயம்..!

Siva

புதன், 4 டிசம்பர் 2024 (17:41 IST)
திருப்பத்தூரில் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், பத்துக்கும் மேற்பட்ட போலீசார் சோதனை செய்த போது, போலீஸ் அதிகாரி ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூரில் காந்தி சிலை அருகே ஒரு ஸ்பா செயல்பட்டு வந்தது. இதில் பாலியல் தொழில் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, டிஎஸ்பி ஜெகநாதன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்துவதற்காக அந்த ஸ்பாவுக்குள் அதிரடியாக நுழைந்தனர்.

இந்த நேரத்தில், பாலியல் தொழிலாளிகள் மற்றும் அந்த ஸ்பாவில் வேலை செய்பவர்கள் தப்பிச் சென்றனர். ஜெகன் என்ற போலீஸ் அதிகாரி, மொட்டை மாடியில் யாராவது பதுங்கி இருக்கிறார்களா என்பதை பார்க்கச் சென்றார். அப்போது அவர் இடறி கீழே விழுந்ததால், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக, ரெய்டை நிறுத்திவிட்டு போலீசார் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தலையில் கடுமையான காயம் ஏற்பட்டதால், 10 தையல் போட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், அந்த ஸ்பாவில் உள்ள பாலியல் தொழிலாளிகள் மற்றும் ஊழியர்கள் ஸ்பாவை பூட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டனர். தற்போது, அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.



Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்