தமிழ்நாட்டில் மழை தொடர்ந்து வரும் நிலையில் இன்று இரவில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த வாரத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்தது. தற்போது பல பகுதிகளில் மழை சற்று குறைந்திருந்தாலும் அவ்வப்போது பெய்து வருகிறது.
இந்நிலையில் இன்று இரவு 7 மணிக்கு 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கன்னியாக்குமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Edit by Prasanth.K