ஃபெஞ்சல் புயலால் பாதிப்பு: இன்று நிவாரணம் வழங்குகிறார் தவெக தலைவர் விஜய்..!

Siva

செவ்வாய், 3 டிசம்பர் 2024 (12:08 IST)
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நிவாரணம் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக ஃபெஞ்சல் புயல் தோன்றிய நிலையில் இந்த புயல் கடந்த 30ஆம் தேதி புதுவை அருகே கரை கடந்தது என்பதும் இந்த புயல் காரணமாக பெய்த கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விழுப்புரம் உட்பட சில மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட்டது.

இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கி வரும் நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று தனது பனையூர் அலுவலகத்தில் நிவாரணம் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை டிபி சத்திரம் பகுதி மக்களுக்கு இன்று விஜய் நிவாரணம் வழங்கிறார் என்றும், சுமார் 300 குடும்பங்களை நேரில் பனையூர் வரவழைத்து மழை நிவாரண உதவிகளை அவர் வழங்க இருப்பதாகவும் உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்