ஹிந்தி மொழிக்கு எதிராக திமுகவினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்திய எழுத்துக்களை அழிக்கும் திமுகவினர், "500 ரூபாய் நோட்டில் இருக்கும் ஹிந்தி எழுத்தை அழியுங்கள்; பார்க்கலாம்!" என்று சவால் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே கல்விக்கான நிதி தருவோம் என மத்திய நிதி அமைச்சர் கூறியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. அதிமுகவும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், திமுகவினர் ரயில் நிலையங்களில் உள்ள இந்திய எழுத்துக்களை கருப்பு மையால் அழித்து வருகின்றனர். இதற்குப் பதிலடியாக, எச். ராஜா "500 ரூபாய் நோட்டில் இருக்கும் ஹிந்தியை முதலில் அழியுங்கள்; பார்க்கலாம்!" என்று சவால் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"ஹிந்தியை அழிக்க வேண்டும் என்றால், முதலில் சன் ஷைன் ஸ்கூலுக்கே போக வேண்டும். திமுகவில் உள்ளவர்கள் ஒருவராவது உப்பு போட்டு சாப்பிடுகிறவர் இருந்தால், முதலில் அந்த ஸ்கூலுக்கு போங்க. திமுகவில் மொத்தம் 48 சிபிஎஸ்இ ஸ்கூல்கள் உள்ளன. அந்த பள்ளிகளின் பட்டியலை நான் கொடுக்கிறேன். அந்த ஸ்கூல்களில் ஹிந்தி கற்று கொடுக்கலாமா என்று போராட்டம் நடத்துங்கள். முடிந்தால், 500 ரூபாய் நோட்டுகளில் உள்ள இந்திய எழுத்துக்களை அழியுங்கள். நீங்கள் மானங்கெட்டவர்கள்!" என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.