என்னை தாண்டி இந்திய திணிச்சிடுவீங்களா? திடீரென இந்தி எதிர்ப்பில் குதித்த சீமான்!

Prasanth Karthick

செவ்வாய், 25 பிப்ரவரி 2025 (15:06 IST)

தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு காட்டும் தீவிரம் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்து பேசியுள்ளார்.

 

தமிழக அரசு மும்மொழி கொள்கையை ஏற்க மறுத்து வரும் நிலையில், மத்திய அரசு நிதியுதவியை மறுத்து வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தி திணிப்புக்கு எதிராக பல கட்சிகளும் கண்டனங்கள் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறது. இந்தி திணிப்பிற்கு எதிராக நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமானும் களத்தில் குதித்துள்ளார்.

 

இதுகுறித்து பேசிய அவர் “தற்போது தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் தமிழை எடுத்து விட்டார்கள். அங்கு இந்தி கற்பிக்கப்படுகிறது. இதனால் அந்த பள்ளிகளில் பலர் பிள்ளைகளை சேர்க்கின்றனர். தமிழ் படித்தால் பிச்சை எடுக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கி எங்களை வீழ்த்த நினைக்கிறார்கள். தமிழகத்தில் மும்மொழி கொள்கை ஏற்கனவே வந்துவிட்டது. வெவ்வேறு வழிகளில் அதை செயல்படுத்தி வருகிறார்கள். அதை எதிர்ப்பதில் மாநில அரசுக்கு உறுதியில்லை. என்னைத் தாண்டி இந்தியை திணியுங்கள் பார்க்கலாம்” என பேசியுள்ளார்.

 

சமீபமாக நாம் தமிழர் கட்சியிலிருந்து பலரும் விலகி வரும் நிலையில் சீமான் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்