கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன், அதிமுக மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில், 2016 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அம்மன் அர்ஜுனன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அவருடைய மனைவி விஜயலட்சுமியின் பெயரிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை திடீரென அம்மன் அர்ஜுனன் அவர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சோதனை தொடர்ந்து நடந்து வருவதாகவும், சோதனைக்கு பின்னர் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் உட்பட மற்ற விவரங்கள் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.