இந்த நிலையில், டெல்லி முதல்வர் அலுவலகத்தில் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்பட்டதாக முன்னாள் முதல்வர் அதிஷி குற்றஞ்சாட்டினார். இந்த நிலையில் இன்று சட்டமன்றம் தொடங்கியவுடன், எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி தலைமையில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
முதல்வர் அலுவலகத்திலிருந்து அம்பேத்கரின் படங்கள் அகற்றப்பட்டதற்கு எதிராக அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். மேலும், "அம்பேத்கர் வாழ்க" என கோஷமிட்டனர். அதற்கு பதிலடியாக பாஜக உறுப்பினர்கள் "மோடி வாழ்க" என்ற கோஷத்தை எழுப்பினர்.