எழுவர் விடுதலை… ஆர்வம் காட்டும் திமுக அரசு!

Webdunia
புதன், 12 மே 2021 (07:56 IST)
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் 7 பேரின் விடுதலை குறித்து திமுக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று ஆலோசனை நட்த்தியுள்ளார்.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறை தண்டனை பெற்று வரும் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட  7 பேர் விடுதலை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையில் முதல்வரோடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மற்றும் அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆலோசனைக்குப் பின்னர் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ‘இது சம்மந்தமாக முதல்வர் நல்ல முடிவை எடுப்பார். தேவைப்பட்டால் அரசு மீண்டும் தீர்மானம் இயற்றும்’ எனக் கூறியுள்ளார். இது சம்மந்தமாக அதிமுக அரசு ஏற்கனவே தீர்மானம் இயற்றி அதை ஆளுநர் கிடப்பில் போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்