நடிகையை திட்டிய நடிகர் அஜித் ! ஏன் தெரியுமா?

புதன், 12 மே 2021 (00:24 IST)
தன்னை படப்பிடிப்பு தளத்தில் தல அஜித் திட்டியதாக ஒரு நடிகை கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார் இவர் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் அப்டேட் கொரொனா இரண்டாம் அலையினால் தள்ளிபோனது.

இந்நிலையில், வெற்றிக்கொடி கட்டு, உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை மாளவிகா. இவர் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்தார்.


அப்போது அவர், சுந்தர் சி இயக்கத்தில் நானும் அஜித்குமாரும் இணைந்து நடித்த படம் உன்னைத் தேடி. இப்படத்தின் பாடல் ஷூட்டிங்கின்போது, நான் சரியான நடனம் ஆடவில்லை. உடனே அஜித்குமார், மாஸ்டர் சொல்லிக்கொடுப்பதை கேட்டு கவனமாக ஆடுங்கள் எனத்  திட்டியதாக மாளவிகா தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்