எனது ஒரு தூணையே இழந்துவிட்டேன் - கிரிக்கெட் வீரர் உருக்கம்

புதன், 12 மே 2021 (00:12 IST)
பிரபல கிரிக்கெட் வீரர் பியூஸ் சாவ்லாவின் தந்தை கொரோனாவால் பலியான நிலையில், அவரது மறைவையொட்டி உருக்கமாக பதிவிட்டுள்ளார் அவர்.

கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.


இந்தக் கொரொனா தொற்றிற்கு சாதாரண மக்கள் முதல், அரசியல்தலைவர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், சினிமா நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்

தற்போது, ஒருநாளில் சுமார் 4 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். மக்களைக் கொரொனா தொற்றிலிருந்து பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் பியூவ் சாவ்லாவின் தந்தை கொரொனாவால் உயிரிழந்துள்ளார். இந்தத் தகவலை பியூவ் சால்வா தனது சமூக வலைதளப் பக்கத்தில் உறுதி செய்தார். அவருக்கு சக வீரர்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில் பியூஸ்சாவ்லா   தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தன் வாழ்க்கை இனிமேல் முன்பு போல இருக்கப்போவதில்லை எனவும், தூணையே நான் இழந்துவிட்டேன் என மிகவும் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இடம்பெற்ற பியூஸ்சாவ்லா இம்முறை மும்பை அணியில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்