இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்: கேரள நர்ஸ் உள்பட 31 பேர் பலி!

Webdunia
புதன், 12 மே 2021 (07:44 IST)
இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்: கேரள நர்ஸ் உள்பட 31 பேர் பலி!
இஸ்ரேல் மீது நடந்த ராணுவ தாக்குதலில் குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததை அடுத்து இந்திய பெண் உள்பட 33 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகள் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருக்கும் நிலையில் நேற்று காலை காச குன்றுப் பகுதியில் மோதல் தீவிரம் அடைந்தது. இந்த மோதலின்போது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 13 மாடி குடியிருப்பு கட்டடம் ஒன்று இடிந்து தரைமட்டமாகி. இந்த கட்டிடத்தில் தங்கியிருந்த கேரளாவை சேர்ந்த நர்ஸ் சௌமியா என்பவர் பரிதாபமாக பலியானார். அவருடன் சேர்த்து மொத்தம் 33 பேர் பலியாகி உள்ளனர் என்பதும் இவர்களில் மூன்று பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
கேரளாவை சேர்ந்த நர்ஸ் செளமியா தனது கணவருடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தபோது ராக்கெட் தாக்குதல் நடந்ததாகவும் அப்போது அவர் பலியாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த தகவலை மத்திய வெளியுறவுத்துறை உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது கேரளாவில் பலியான சௌமியாவின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்