வேளச்சேரியில் திடீரென ஏற்பட்ட 40 அடி பள்ளம்… விபத்தில் சிக்கிய 3 தொழிலாளர்களில் இருவர் மீட்பு!

Webdunia
திங்கள், 4 டிசம்பர் 2023 (10:00 IST)
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக நேற்றிரவு முதல் சென்னை முழுவதும் பெருமழை பெய்து வருகிறது. அதனால் சென்னை முழுவதும் வெள்ளக் காடாக மாறிவருகிறது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

புறநகர் ரயில் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன. பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. மின்சாரமும் பல பகுதிகளில் பாதுகாப்பு காரணமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை வேளச்சேரியில் பெட்ரோல் பங்க் அருகே சாலையில் திடீரென 40 அடிக்கு மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டு, பெட்ரோல் பங்க் கூரையும் இடிந்து விழுந்துள்ளது. அங்கு வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் 3 பேர் சிக்கியுள்ளனர். அதில் 2 பேரை பாதுகாப்பாக மீட்டுள்ளனர். மீதம் இருக்கும் ஒருவரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்