இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என பாஜக அறிவித்தது. இதுவரை நயினார் நாகேந்திரன் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகவும், அவரை எதிர்த்து இன்னும் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில், பாஜக தலைவராக தகுதி பெற 10 ஆண்டுகள் கட்சியில் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் நயினார் பாஜகவில் சேர்ந்த நிலையில் , "அவர் எப்படி தலைவராக முடியும்?" என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் அதே நேரத்தில், "அண்ணாமலை என்ன பாஜகவில் 10 ஆண்டுகள் இருந்தாரா?" என்ற எதிர்வினையும் கிளம்பியுள்ளது. இதனால் பாஜகவில் விதிகள் மாற்றப்பட்டுவிட்டதாகவும், புதிய தலைவர் நயினார் நாகேந்திரன்தான் எனவும் அவரது தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நாளை தமிழக பாஜக தலைவர் யார் என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும், நாளை மாலை புதிய தலைவர் பதவி ஏற்கிறார் என்றும் கூறப்படும் தகவல்கள், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.