வெள்ள நீரில் வெளியேறும் பாம்புகள்… பாம்பு பிடிப்பவர்களின் செல்போன் எண்களை வெளியிட்ட சென்னை மாநகராட்சி!
திங்கள், 4 டிசம்பர் 2023 (08:35 IST)
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல பகுதிகள் வெள்ளக் காடாக மாறியுள்ளன. இதன் காரணமாக குடியிருப்புப் பகுதிகளுக்குள் பாம்பு உள்ளிட்ட பிராணிகள் நுழைய வாய்ப்புள்ளது. பெருங்களத்தூர் அருகே முதலை ஒன்று சாலையைக் கடந்து சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி சார்பாக சென்னையை சுற்றியுள்ள பாம்பு பிடிப்பவர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் செல்போன் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தேவைப்படும் மக்கள் அவர்களை தொடர்புகொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பகுதி வாரியாக பாம்பு பிடிப்பவர்களின் பெயர் மற்றும் செல்போன் எண்கள்
1) பாபா
98415 88852
(போரூர், ஐயப்பந்தாங்கல், வளசரவாக்கம், பூந்தமல்லி, நெற்குன்றம் மற்றும் கோயம்பேடு பகுதிகள்)
2) சக்தி
90943 21393
(போரூர், ராமாபுரம், நெற்குன்றம், மணப்பாக்கம், முகலிவாக்கம் மற்றும் பெரம்பூர் பகுதிகள்)
3) கணேசன்
74489 27227
(அண்ணாநகர் முதல் பட்டாபிராம் வரை)
4) ஜெய்சன்
80562 04821
(குரோம்பேட்டை பகுதிகள்)
5) ராபின்
88078 70610
(குரோம்பேட்டை முதல் தாம்பரம் வரை)
6) மணிகண்டன் 98403 46631
(போரூர் மற்றும் ஆலப்பாக்கம் அருகிலுள்ள ஏரியா)