சென்னையில் வீடு வீடாக சென்று காய்ச்சல் சோதனை… தடுப்புப் பணிகள் தீவிரம்!

Webdunia
திங்கள், 22 ஜூன் 2020 (07:38 IST)
சென்னையில் களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகிக் கொண்டே வருகிறது. அதிலும் தலைநகர் சென்னையில் பாதிப்பு மிக வேகமாகப் பரவி வருகிறது. இதனால் சென்னையில் ஜூன் 19 முதல் 30 வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் இதுவரை வீடு வீடாக சென்று காய்ச்சல் அல்லது கொரோனா அறிகுறிகள் உள்ளதா என தகவல் சேகரிக்கப்பட்டு வந்தது.

தற்போது இந்த தகவல்களோடு உடல் வெப்பநிலையை சோதிக்கும் சோதனையும் மேற்கொள்ள படுகிறது. இதற்காக களப்பணியாளர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் வழங்கப்பட்டு உள்ளது. வெப்பநிலை அதிகமாக உள்ளவர்கள் அடுத்தகட்டமாக பிசிஆர் சோதனை முகாம்களுக்கு அனுப்பப்பட்டு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட இருக்கின்றனர். சென்னையில் பாதிப்பு அதிகமாக உள்ள மண்டலங்களான ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், திரு.வி.க.நகர் ஆகிய பகுதிகளில் அதிகமாக நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்