மேலும் ஒரு தமிழக அமைச்சருக்கு கொரோனாவா? இதோ டெஸ்ட் ரிசல்ட்

திங்கள், 22 ஜூன் 2020 (07:15 IST)
தமிழகத்தில் கொரோனாவால் பொதுமக்கள் மட்டுமின்றி பதவியில் இருப்பவர்களும் பாதிக்கப்பட்டு வருவதால் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் அவர்களும் மாம்பலம் காவல்துறை இன்ஸ்பெக்டர் அவர்களும், சென்னை வடபழனி விஜயா மருத்துவமனை இயக்குனர் அவர்களும் கொரோனாவுக்கு பலியாகி உள்ள செய்தி ஊடகங்களில் பரபரப்பாக வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு அமைச்சருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும், ஆனால் அவருக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் அவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து அவருக்கு மணப்பாக்கம் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது அவருக்கு கொரோனா சோதனை ரிசல்ட் வந்த நிலையில் அவருக்கு கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது முறையாக அமைச்சர் சிவி சண்முகம் அவர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டதாகவும் இதிலும் நெகட்டிவ் இன்றைய ரிசல்ட் வந்து இருப்பதால் அவருக்கு கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
ஏற்கனவே தமிழக அமைச்சர் அன்பழகன் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்தன. இந்த தகவலை அமைச்சர் அன்பழகன் தரப்பினர் மறுத்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் முக ஸ்டாலின் உள்பட பலர் அவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என்று தெரிவித்து வருகின்றனர்
 
இந்த நிலையில் இன்னொரு அமைச்சருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ரிஷிவந்தியம் திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் அவர்களும் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனி அவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்