90 லட்சத்தை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு:

திங்கள், 22 ஜூன் 2020 (06:36 IST)
90 லட்சத்தை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு:
உலகளவில் கொரோனா பாதிப்பு 90 லட்சத்தை தாண்டியதால் உலகில் உள்ள மனித இனமே பெரும் அச்சத்தில் உள்ளது. உலகின் சுமார் 200 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தினமும் லட்சக்கணக்கானோர்களை புதியதாக தாக்கி வருவதால் உலக அளவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
 
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,044,544 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,837,939 என்றும், கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 470,665 என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
 
உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில் 23,56,657 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், அந்நாட்டில் 122,247 கொரோனாவால் பலியாகியுள்ளனர் என்பதும், 980,355 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
அமெரிக்காவை அடுத்து பிரேசில் நாட்டில் 1,086,990 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், ரஷ்யாவில் 584,680 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நான்காவது இடத்தில் உள்ள இந்தியாவில் 426,910 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
 
மேலும் இங்கிலாந்தில் 304,331பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், ஸ்பெயினில் 293,352 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், பெரு நாட்டில் 254,936 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், சிலி நாட்டில் 242,355பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், இத்தாலீயில் 238,499 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்