பாஜக இந்துக்களுக்கான அரசு என்பது மிகப்பெரிய பொய்.. ஜோதிமணி காட்டம்

Mahendran
செவ்வாய், 23 ஜனவரி 2024 (16:43 IST)
பாஜக இந்துக்களக்கான அரசு என்பது மிகப் பெரிய பொய் என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.  
 
காங்கிரஸ் எம்பி ஜோதிமணி இன்று  அரவக்குறிச்சி அருகே புதிய நூலக கட்டிடத்திற்கு பூமி பூஜை பணிகளை துவக்கி வைத்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது கோவில் கும்பாபிஷேக விழாவை அரசியல் கட்சி கூட்டம் போல் இந்தியாவில் யாரும் நடத்த முடியாது என்றும் கோயில் குடமுழுத்து விழாவுக்கு என ஆகம விதிமுறைகள் உள்ளது என்றும் தெரிவித்தார். 
 
கோவிலை முழுமையாக கட்டி முடித்த பிறகு கோவில் சிலையை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பது ஆகம விதிமுறை என்றும் அவர் கூறினார். மேலும் இந்தியாவின் குடியரசு தலைவராக இருக்கும் திரௌபதி முர்மு அவர்கள் ஒரு இந்து. ஆனால் அவர் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கு அழைக்கப்படவில்லை அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு அழைக்கப்படவில்லை
 
அவர் ஒரு இந்துவாக இருந்தும் பாஜக ஏன் புறக்கணிக்கிறது? இந்துக்களுக்கான அரசு என்று கூறுவது ஒரு மிகப்பெரிய பொய் என்பது எதிலிருந்து தெரிய வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்