உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தில் ராமர் கோவில் பிராணண பிரதிஷ்டை விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில், பிரதமர் மோடி பால ராமர் சிலைக்கு பூஜை செய்தார். அதன்பின்னர், உ.பி., முதல்வர் யோகி ஆதித்ய நாத், ஆளுநர் ஆனதிபென் படேல், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் பூஜை செய்து வழிபட்டனர்.
இது சம்மந்தமாக அவர் “மோடியின் இந்த செயலை சொல்லும் போதே என் கண்ணில் நீர் வருகிறது. ராமர் கோயில் இந்தியா முழுவதுக்குமான கோயில். இன்றைய நாள் இந்திய சரித்திரத்தில் முக்கியமான நாள். ராமர் கோயில் மோடிக்கு அழியாப் புகழைப் பெற்றுத் தரும். அயோத்தியில் இருக்கவேண்டிய நான் இங்கே இருப்பது எனக்கு வருத்தமாக உள்ளது. ஆனாலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது எனக்கு ஆறுதலாக உள்ளது” என்றும் கூறியுள்ளார்.