அயோத்தியில் நேற்று ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் இந்த கோவிலுக்கு பல முக்கியஸ்தர்கள் வருகை தந்தனர். இந்த நிலையில் கோவில் திறப்பு விழா குறித்து பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா ஜெய்ஸ்ரீராம் கோஷம் என்பது யாருக்கும் தனிப்பட்ட சொத்து அல்ல, அது ஒவ்வொரு பக்தனின் சொத்து.
மேலும் கும்பாபிஷேக தினத்தில் விடுமுறை அறிவிக்கவில்லை என்பதற்காக தன்னை இந்து விரோதி என முத்திரை குத்துகிறார்கள் என்றும் மத்திய அரசே அரை நாள் மட்டும் தான் விடுமுறை அறிவித்தது என்றும் இந்த நிகழ்வு உத்தரபிரதேசத்தில் நடைபெறும் நிலையில் எதற்காக கர்நாடகத்தில் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்