கடந்த டிசம்பர் 26ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் ₹7,125 என்று இருந்த நிலையில், படிப்படியாக உயர்ந்து நேற்று ₹7260 வரை விற்பனையானது. ஆனால், இன்று திடீரென ஒரு கிராமுக்கு ₹45 உயர்ந்து 7,215 ஆக விற்பனையாகிறது.
அதேபோல், நேற்று ஒரு சவரன் தங்கம் ₹58,080 என்ற விலையில் விற்பனையான நிலையில், இன்று ₹360 குறைந்து ₹57,720 என விற்பனையாகியுள்ளது.
அதேபோல், 24 கேரட் தூய தங்கம் ஒரு கிராம் ₹7871 என்றும், எட்டு கிராம் ₹62,968 என்றும் விற்பனையாகி வருகிறது.
நேற்று ஒரு கிராம் வெள்ளி ₹100 என விற்பனையான நிலையில், இன்று ₹1 குறைந்து ₹99 ஆகவும், ஒரு கிலோ ₹99,000 என்றும் விற்பனையாகி வருகிறது.