தொடர்ந்து பதினோராவது முறையாக தென்னிந்திய சிபிஎஸ்இ ஜூடோ விளையாட்டுப் போட்டிகளில் ஒட்டு மொத்த சாம்பியன்சிப் பட்டம் வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ள நமது கரூர் பரணி வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி.
பள்ளியின் தாளாளரும் மாவட்ட ஜூடோ சேர்மனும் ஆகிய மோகனரங்கன், வித்யாலயா முதன்மை முதல்வரும் ஜூடோ சங்க மாநில துணைத்தலைவருமான முனைவர் ராமசுப்பிரமணியன், முதல்வர்கள், பரணி ஜூடோ பயிற்சியாளர்கள் முத்துலஷ்மி, பார்த்திபன், ரம்யா மற்றும் பதக்க வேட்டையாடி தமிழகத்தை தொடர்ந்து தலைநிமிர வைத்த விளையாட்டு வீரர்களுக்கு நம் அனைவரின் இதயபூர்வமான பாராட்டும், வாழ்த்தும், அன்பும், நன்றியும் நம் சாதனைகள் தொடரட்டும், தாய்த் தமிழ்நாடு வெல்லட்டும்!
இந்த ஆண்டு 9 தங்கம், 11 வெள்ளி, 11 வெண்கலம் வென்று மொத்தம் 89 புள்ளிகளுடன், தொடர்ந்து 11வது முறையாக பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. CBSE SOUTH ZONE CHAMPIONSHIP பட்டத்தை 11வது முறையாக வென்று கரூர் பரணி வித்யாலயா பள்ளி புதிய வரலாறு படைத்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்தது.