வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ராம்குமாருக்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து

வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (15:10 IST)
19 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த 24 ஆம் தேதி முதல் சீனாவில் ஹாங்சோ நகரில் நடந்து வருகிறது. இப்போட்டியில் இந்தியா, சீனா, இலங்கை உள்ளிட்ட  நாடுகள் பங்கேற்றுள்ளன.

இப்போட்டிகள் வரும் அக்டோபர் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஏற்கனவே, இந்திய வீரர்கள் தங்கள் திறமையை நிரூபித்து பல போட்டிகளில் தங்கம்., வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்று வருகின்றனர்.

இந்த நிலையில், பாய்மர படகுப் போட்டியில் தமிழ் நாட்டைச் சேர்ந்த விஷ்ணு சரவணன் வெண்கலப் பதக்கம் வென்ற  நிலையில் இன்று ஆண்களுக்கான டென்னிஸ் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரர் ராம்குமாருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

இதுகுறித்து அமைச்சர் உதயநிதி கூறியுள்ளதாவது? ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கான டென்னிஸ் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர்  ராம்குமார் ராம நாதனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இவர் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முக்கிய வீரர் என்பது பெருமையளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்