போலீசார் மீதே தாக்குதல்.! விழிபிதுங்கி நிற்கும் திமுக அரசு..! இபிஎஸ் கடும் விமர்சனம்..!!

Senthil Velan
செவ்வாய், 28 மே 2024 (22:20 IST)
திருச்செங்கோடு அருகே கோயில் திருவிழாவில் போதை ஆசாமிகள் காவலர்களைத் தாக்கிய சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து  தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சமீபத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் போதை ஆசாமிகள் காவலர்களைத் தாக்கிய சம்பவம் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் உலா வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
 
தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்த காரணத்தினால் பொதுமக்கள், வியாபாரிகள் தாக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது போதை ஆசாமிகள் காவல்துறையினரையே பொதுவெளியில் தாக்கப்படும் சம்பவங்கள் கவலையளிக்கிறது என்று எடப்பாடி தெரிவித்துள்ளார்.
 
திமுக ஆட்சியாளர்களும், இதை தடுக்க வேண்டிய காவல்துறையினரும் விழிபிதுங்கி நிற்கும் அவலம் நிலவுகிறது என்றும் இத்தகையவர்களால் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கு பெரும் Others அச்சமும் பாதுகாப்பற்ற சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

ALSO READ: 50 குழந்தைகள் கடத்தல் - வட இந்தியாவை அலறவிட்ட மாபியா கும்பல் கைது..!

என்ன செய்யப் போகிறார் காவல்துறையை கையில் வைத்திருக்கும் திமுக அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிச்சாமி, இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாவண்ணம் காவல்துறையை சுதந்திரமாக செயல்பட வைத்து , சட்டம் ஒழுங்கை பாதுகாக்க திமுக முதலமைச்சரை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்