எடப்பாடி பழனிசாமி ஒரு ராஜதந்திரி; தலைமை மாற்றத்துக்கு வாய்ப்பே இல்லை..! ராஜன் செல்லப்பா

Mahendran

வெள்ளி, 24 மே 2024 (11:07 IST)
எடப்பாடி பழனிச்சாமி ஒரு ராஜதந்திரி என்றும் அவரது தலைமை மாற வாய்ப்பே இல்லை என்றும் ராஜன் செல்லப்பா கூறியுள்ளார் 
 
பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தால் எடப்பாடி பழனிச்சாமி தலைமை கேள்விக்குறியாகும் என்று அதிமுக வட்டாரங்கள் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் இது குறித்த கேள்வி ஒன்று ராஜன் செல்லப்பா பதில் அளித்தார்
 
 நாடாளுமன்ற தேர்தலை பொருத்தவரை 40 இடங்களிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும் அதேபோல் 2026 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்தார் 
 
வேலுமணி தலைமையில் அதிமுக செயல்படும் என்று திமுக கூறுகிறதே என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிச்சாமி ஒற்றை தலைமையாக, ஒப்பற்ற தலைமையாக இருக்கிறார் என்றும் அவர் ஒரு மிகப்பெரிய ராஜதந்திரி என்றும், அதிமுகவை காக்கும் முயற்சிகளில் ஈடுபடும் அவரை தலைமையில் இருந்து மாற்ற வாய்ப்பே இல்லை என்றும் தெரிவித்தார் 
 
அதிமுகவை காப்பாற்றுவதற்காகவே எடப்பாடி பழனிச்சாமி தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டுள்ளார் என்றும் ஜெயலலிதா போலவே அதிமுகவைக்காக பணியாற்றி வருகிறார் என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் கொடுத்தார்
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்