எடப்பாடி பழனிசாமி கை நீட்டுபவர் தான் பிரதமராக வருவார்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி

Mahendran

வியாழன், 23 மே 2024 (15:28 IST)
பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு பின்னால் எடப்பாடி பழனிச்சாமி கை காட்டுபவர் தான் பிரதமராக வருவார் என முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஏழு கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் அதனை அடுத்து பாஜக மற்றும் அதிமுக கூட்டணி ஓரளவு வெற்றி பெறும் என்றும் கணிக்கப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் அதிமுக கூட்டணி அதிகபட்சமாக 5 தொகுதிகளில் தான் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்புகள் கூறி இருக்கும் நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசி ஆர்பி உதயகுமார் நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பின்னர் எடப்பாடி பழனிச்சாமி கை நீட்டுபவர் தான் பிரதமராக வருவார் என்று பேசியுள்ளார். 
 
அவரது பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் நெட்டிசன்கள் காமெடியான கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர். 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்