பேருந்துகளில் ஏர் ஹாரன் சோதனை.! அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

Senthil Velan
சனி, 25 மே 2024 (12:05 IST)
கோவையில் பேருந்துகளில் ஏர் ஹாரன் சோதனை நடத்திய போக்குவரத்து போலீசார், விதி மீறலில் ஈடுபட்ட பேருந்துகளுக்கு அபராதம் விதித்தனர்.
 
பேருந்துகளில் ஏர் ஹாரன் எனப்படும் அதிக ஒலி  எழுப்பக் கூடிய ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது தமிழக அரசு எச்சரித்துள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து காவல்துறையினர்  சோதனைகள் செய்து பேருந்துகளில் ஏர் ஹாரன் இருந்தால் அவற்றை அகற்றி அப்பேருந்துகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். 
 
அதன் தொடர்ச்சியாக கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையம் அருகில் கோவை மாநகர சட்டம் ஒழுங்கு காவல் ஆணையாளர் ஸ்டாலின் தலைமையில்  சோதனை நடைபெற்றது.  இந்த சோதனையில் பேருந்துகளில் இருக்க கூடிய ஏர் ஹாரன், மியூசிக்கல் ஹாரனைகளை காவல்துறையினர் அகற்றினர்.

ALSO READ: பிரதமர் மோடி தங்கிய ஹோட்டலுக்கு 80 லட்ச ரூபாய் பாக்கி..! வட்டியுடன் செலுத்த ஹோட்டல் நிர்வாகம் எச்சரிக்கை..!

மேலும் ஏர் ஹாரன் இருக்கும் பேருந்துகளுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மது அருந்தி உள்ளார்களா என்பது குறித்தும் நவீன கருவிகள் மூலம் சோதனை செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்