ஹரியானாவில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு, பரிதாபாத், ஹிசார், ரோஹ்தக், கர்னல், யமுனா நகர், குருகிராம், மனேசர் உள்ளிட்ட 10 மாநகராட்சிகள் மற்றும் 21 நகராட்சிகளில் மார்ச் 2ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. மேலும் அம்பாலா மற்றும் சோனிபட் மாநகராட்சிகளில் இடைத்தேர்தலும் நடந்தது. அதேபோல் மார்ச் 9ஆம் தேதி பானிபட் மாநகராட்சிக்கு தனித்து தேர்தல் நடைபெற்றது.
இந்த நிலையில் மொத்தம் 10 மாநகராட்சிகளில் மேயர் பதவிக்கான தேர்தல் நடந்த நிலையில், பரிதாபாத், அம்பாலா, யமுனா நகர், ஹிசார், கர்னல், ரோஹ்தக், சோனிபட் உள்ளிட்ட 9 மாநகராட்சிகளில் பாஜக அமோக வெற்றிபெற்றது. மனேசர் மாநகராட்சியில் மட்டும் சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றார்.
இதன் மூலம், 10 மாநகராட்சிகளில் பாஜக கட்டுப்பாட்டில் 9 மாநகராட்சி உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. அண்மையில் சட்டசபை தேர்தலில் தோல்வியை சந்தித்த காங்கிரஸ் கட்சி, உள்ளாட்சி தேர்தலிலும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.