இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. தமிழக போக்குவரத்து துறை அறிவிப்பு..!

Mahendran

வெள்ளி, 24 மே 2024 (11:43 IST)
முகூர்த்த நாள் மற்றும் வார விடுமுறை காரணமாக இன்று முதல் மூன்று நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது 
 
வெள்ளி, சனி, ஞாயிறு வார விடுமுறை மற்றும் முகூர்த்த நாளை முன்னிட்டு சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு கூடுதலான பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை கழக மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார் 
 
சென்னை கிளம்பாக்கத்தில் இருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு இன்று 535 பேருந்துகளும், நாளை 595 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும் என்றும் அதேபோல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு இன்றும் நாளையும் 130 பேருந்துகள் கூடுதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
தினசரி இயங்கக்கூடிய பேருந்துகளுடன் இந்த பேருந்துகள் கூடுதலாக இயங்கும் என்றும் தேவைப்பட்டால் மேலும் அதிகமாக பேருந்துகளை இயக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் இந்த சிறப்பு பேருந்துகளுக்கு முன்பதிவு செய்ய தமிழக அரசின் போக்குவரத்து துறையின் இணையதளம் மற்றும் மொபைல் செயலியின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார். 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்