நடிகை சௌந்தர்யா, கடந்த 2004ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக ஹெலிகாப்டரில் சென்றபோது விபத்துக்குள்ளாகி காலமானார். இது விபத்து அல்ல கொலை என ஆந்திராவைச் சேர்ந்த சிட்டி மல்லு என்பவர் காவல்துறையில் புகார் அளித்தார்.
மேலும், நடிகர் மோகன் பாபுவே சௌந்தர்யா மரணத்திற்கு காரணம் என்று அவர் குற்றம் சாட்டியிருந்தார். இந்த புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சௌந்தர்யாவின் கணவர் ரகு அறிக்கை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
"சௌந்தர்யாவின் மரணம் விபத்து அல்ல, கொலை என ஆந்திராவைச் சேர்ந்தவர் புகார் அளித்துள்ள தகவல் தவறானது. நடிகர் மோகன் பாபுவுடன் 25 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் நல்ல நட்புடன் இருக்கிறோம். சொத்து தொடர்பாக பரவும் செய்திகள் ஆதாரமற்றவை. அனைத்து கருத்துகளையும் மறுப்பதாக தெரிவித்துக்கொள்கிறேன்," என அவர் கூறியுள்ளார்.