பாஜகவில் பெண்கள் பாதுகாப்புடன் தான் இருக்கின்றனர்: குஷ்பு

Webdunia
ஞாயிறு, 8 ஜனவரி 2023 (12:59 IST)
பாஜகவில் பெண்கள் பாதுகாப்புடன் தான் இருக்கிறார்கள் என்றும் எல்லா பெண்களும் பாஜகவில் இருந்து வெளியேற வில்லை என்று நடிகையும் பாஜக பிரபலமான குஷ்பு தெரிவித்துள்ளார். 
 
நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகினார் என்பதும் அவர் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார் என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இது குறித்த கேள்விக்கு பதிலளித்த நடிகை குஷ்பு பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கின்றது என்றும் நானும் ஒரு பெண், பாஜகவில் தானே இருக்கின்றேன் என்றும் எல்லா பெண்களும் பாஜக விட்டு வெளியேறவில்லை என்றும் தெரிவித்தார்.
 
கோவை வெள்ளலூரில் ரேக்ளா ரேஸ் தொடங்கி வைத்த பாஜக தேசிய குழு உறுப்பினர் குஷ்பு இந்த கருத்தை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்