இந்தியாவில் பெண்கள் வாழ்வதற்கான சிறந்த நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடம்

வெள்ளி, 6 ஜனவரி 2023 (21:13 IST)
இந்தியாவில் பெண்கள் வாழ்வதற்கான சிறந்த நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது.

உலகில் உள்ள முன்னணி நிறுவங்கள் அனைத்தும் சென்னையில்தான் தங்கள்  நிறுவனத்தையும் கிளைகளையும் வைத்துள்ளனர்.

மும்பை, கொல்கத்தா, பெங்களூர், ஆகிய நகரங்களுக்கு இணையாக அனைத்து வசதிகளும் கொண்ட நகரமாக சென்னை இருக்கிறது.

இந்த நிலையில், சமூகம், மக்களின் பாதுகாப்பு, தொழில் நுட்பம் ஆகியவற்றின் அடிப்படையில், 111  நகரங்களில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், தமிழகத்தைச் சேர்ந்த 8 நகரங்கள் பெண்கள் வாழ்வதற்கேற்ற சிறந்த நகரங்களாக இடம்பிடித்துள்ளது.

மேலும், பெண்கள் வசிப்பதற்கு ஏற்ப 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்திய நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது.

இப்பட்டியலி,புனே, பெங்களூரு, ஐதராபாத், மும்பை, அகமதாபாத், விசாசபட்டினம், கொல்கத்தா, கோவை ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்