ஃபிரான்ஸ் வாலிபரை திருமணம் செய்துகொண்ட சென்னை இளைஞர்

Webdunia
வியாழன், 7 பிப்ரவரி 2019 (08:43 IST)
சென்னை இளைஞர் ஒருவர் ஃபிரான்ஸ் வாலிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
ஓரினச்சேர்க்கை குற்றமல்ல என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து நாடெங்கும் பல ஓரினச்சேர்க்கை ஜோடிகள் காதல் திருமணம் செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில் சென்னையை சேர்ந்த வினோத் என்பவருக்கு டேட்டிங் ஆப் மூலம் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வின்செண்ட் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இவர்களுக்குள் பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக தெரிகிறது.
 
இதையடுத்து இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண வரவேற்பு மும்பையில் கோலாகலமாக நடந்தது. இருவரின் குடும்பத்தாரும் இவர்களின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்