எம்.ஆர்.விஜயபாஸ்கரை பின் தொடர்ந்த 7 பேர் ..அமைச்சரை கொல்ல சதித்திட்டமா ?

Webdunia
புதன், 31 மார்ச் 2021 (23:17 IST)
அமைச்சரும், கரூர் தொகுதியின் அதிமுக வேட்பாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கரை பின் தொடர்ந்த 7 பேர் அடங்கிய குழு ? அமைச்சரை கொல்ல சதித்திட்டமா ? காவல்துறை தீர விசாரிக்க வேண்டுமென்றும் கரூர் மாவட்ட காவல்துறை குறித்து தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்க உள்ளதாகவும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி பேட்டி
 
கரூர் கோவை சாலையில் உள்ள ராமானுஜ நகரில் உள்ள அலுவலகத்தில் கரூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும், தமிழக போக்குவரத்து அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நேற்று இரவு கரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் 3 பேர் எங்களை பின் தொடர்ந்து வந்தார்கள். அவர்கள் திமுக முக்கிய பிரமுகர்களுடன் இருந்த புகைப்படங்கள் இருந்தது. பெரிய காளிபாளையம், அரசு காலணி போன்ற இடங்களில் எங்களை பின் தொடர்ந்து பிரச்சாரத்தை படம், வீடியோ எடுத்துள்ளனர். இவர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தோம். திமுக தலைமையில் அவர்கள் நெருக்கமான உள்ள புகைப்படங்களை காட்டி விளக்கமாக எடுத்துரைத்தார். எங்களுடை பிரச்சாரத்தை சீர் குலைக்கும் நோக்குடன் 4 நாட்களாக பின் தொடர்கின்றனர். சர்வே செய்பவர்கள் எங்களை பின் தொடர்வதன் நோக்கம் என்ன? நான் பேசின வீடியோவை கட் செய்து என் மீது போலீசில் புகார் அளித்து எப்.ஐ.ஆர். போட சொல்கிறார்கள். ஆனால் நான் அதன் முழு வீடியோவை காண்பித்து புகார் அளித்தவர்கள் மீதே எம்.ஐ.ஆர் போட வைத்தோம். திமுக வேட்பாளருக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அதனால் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சமூக வலை தளங்களில் பரப்பி வருகின்றனர். எதிர் கட்சி வேட்பாளர் மீது 420 வழக்கு 16 இருக்கிறது. இது போன்று கேவலமான விளம்பரம் செய்து வருகின்றார் எதிர்கட்சி வேட்பாளர். 4 நாட்களாக வெளியூர் ஆட்களை கொண்டு வந்து ஜாதிக் கலவரத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள். சின்னகாளிபாளையத்தில் அதிமுக கொடி நட்ட இளைஞர்களை திமுகவினரை தாக்குகின்றனர். தேர்தல் நல்ல முறையில் நடக்க வேண்டும் என்பதற்காக அமைதி காக்கிறோம்.

பிரச்சாரம் முடியஇன்னும் ஒரு சில நாட்களில் எனக்கோ அல்லது என்னை சார்ந்தவர்களுக்கோ ஏதும் பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு காவல் துறையே காரணம். இது வன்மையாக கண்டிக்கதக்கது. ஆதாரங்களுடன் செய்தியாளர்களுக்கு பேடியளித்தார். இது தொடர்பாக காவல் துறையினரும், தேர்தல் அதிகாரியும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொய்யான ஆவணங்களை கொடுத்து தங்கும் விடுதியில் தங்கியுள்ளனர் திமுகவினர். கரூர் பகுதியில் மாட்டு வண்டியில் மணல் அள்ளுவது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. முறைப்படி அரசு அனுமதி பெற்று, நெரூர் வடக்கு, கள்ளபள்ளி, நன்னியூர், கருப்ப நாயக்கன்பட்டி.
 
ஷியா கமிட்டி அனுமதி அளித்துள்ளது. மாட்டு வண்டியில் உள்ளூர் தேவைக்காக மணல் அள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் மணல் அள்ள அனுமதி அளிப்பார்கள். தேர்தல் நடத்தை விதி அமுலிக் இருப்பதால், தேர்தலுக்குப் பிறகுபது நடைமுறை படுத்தப்படும்.அமராவதி ஆற்றில் மணல் அள்ள தடை வதிக்கப்பட்டிருந்தது. துறை ரீதியாக விதிகளை பின்பற்றி மணல் அள்ள நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
 
மாட்டு வண்டி உரிமையாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் மணல் அள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 3 மாதத்திற்கு முன்பு மணல் அள்ள அனுமதி பெற்று தந்ததற்கு நன்றி என்று எதிர்கட்சி வேட்பாளர் பொய்யான விளம்பரத்தை செய்தார். அது பொய்யான செய்தி. தற்போது எல்லாமே மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு தெரிந்து விட்டது. மாட்டு வண்டி மணல் பிரச்சினைக்கு முடிவு கிடைத்துள்ளது என்றார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்