மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணி வழங்கப்படும்- எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

திங்கள், 11 ஜனவரி 2021 (23:59 IST)
கரூரில் மடிக்கணி பெறாத மாணவர்கள் கவலைப்பட வேண்டாம் 2017-18 ஆம் மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணி வழங்கப்படும்- போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

கரூரில்  தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா  கரூர் நகராட்சி ஆண்கள் பள்ளியில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கிய பின்னர் பேசுகையில்., கொரோனா காலத்தில் மாணவர்களின் கல்வி படிப்பு பாதிக்கப்பட கூடாது ஏன ஆன்லைன் கல்விக்கு முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள்  2 ஜிபி டேட்டா வழங்கி உள்ளார். நீட் தேர்வை கொண்டு வந்தவர்கள் இன்று நீட் வேண்டாம் என்று நீழிக்கண்ணீர் வடிக்கிறார்கள். மருத்துவ படிப்பில் 7.5 உள் ஒதுக்கீடு செய்து ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றி உள்ளார் முதல்வர் என்றார். மேலும்., மிக விரைவில் 2017-18 ம் ஆண்டு மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கூறியுள்ளார். அதனால் மாணவர்கள் கவலைப்பட வேண்டாம் அப்பொழுது தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்